Reliable Software
www.garudabazaar.com

"அப்படியே Yoga டீச்சராவே மாறிப் போய்ட்டாங்களே!".. கீர்த்தி சுரேஷின் செம்ம கலாய்.. Trending Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய யோகா டீச்சரைப் போலவே இமிடேட் செய்து அசத்தியுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Keerthy Suresh imitates her yoga teacher fun video trending

தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்று, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் திறம்பட நடித்ததற்காக பாராட்டினைப் பெற்றார். கீர்த்தி சுரேஷின் பட கரியரில் அந்த படம் ஒரு மைல் ஸ்டோனாகவே அமைந்தது.

Keerthy Suresh imitates her yoga teacher fun video trending

தொடர்ந்து கலக்கிக் கொண்டு வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது யோகா செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். ஆன்லைனில் யோகா வகுப்பு அட்டெண்ட் செய்து வரும் கீர்த்தி சுரேஷ் உடலளவில் செம்ம ஃபிட்டாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் கீர்த்தி சுரேஷ், தன் யோகா டீச்சரை போலவே நடித்து காண்பித்துள்ளார்.

Keerthy Suresh imitates her yoga teacher fun video trending

இந்த வீடியோவை, பகிர்ந்த கீர்த்தி சுரேஷின் யோகா டீச்சர் தாரா, “கீர்த்தி சுரேஷ் (கிட்டி) என்னை போலவே இமிடேட் செய்துள்ளார். நான் என் யோகா வகுப்பை வழக்கமாக இப்படிதான் முடிப்பேன். அப்படியே கீர்த்தி சுரேஷூம் இமிடேட் செய்துள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார். இதே வீடியோவை தமது இன்ஸ்டாவில் பதிவிட்ட, கீர்த்தி சுரேஷ், “என்னோட அமைதி இந்த டெய்லி யோகா வகுப்பு மூலமாக வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Keerthy Suresh imitates her yoga teacher fun video trending

நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் அறிமுக நடிகராக நடிக்கும் சாணி காயிதம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

ALSO READ: "Husband தினம் அடிக்குறாரு..".. ரசிகை உருக்கம்... நேரலையில் கொந்தளித்த VJ ரம்யா!

"அப்படியே YOGA டீச்சராவே மாறிப் போய்ட்டாங்களே!".. கீர்த்தி சுரேஷின் செம்ம கலாய்.. TRENDING VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh imitates her yoga teacher fun video trending

People looking for online information on Keerthi Suresh, Keerthy Suresh will find this news story useful.