Breaking: பிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தடம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய்க்கு, பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்த 'சாஹோ' விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'அக்னி சிறகுகள்' படத்தில் நடித்து வருகிறார். 

Karthick Naren to direct a film with Arun Vijay and Nivetha Pethuraj

அதனைத் தொடர்ந்து அருண் விஜய், 'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'துருவங்கள் பதினாறு' படத்துக்கு பிறகு அரவிந்த் சுவாமியை வைத்து கார்த்திக் நரேன் 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அருண்விஜய் தற்போது'பாக்ஸர்' எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இயக்க, 'இறுதிச்சுற்று' ரித்திகா சிங் முக்கியவேடத்தில் நடிக்கிறார்.