அருண் விஜய் நடிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் தனது காட்சிகளின் ஷூட்டிங்கை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளார்.

Arun Vijay wraps up his shooting for Baahubali Prabhas's Saaho

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’, பிரபாஸுடன் ‘சாஹோ’ உள்ளிட்ட திரைப்படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் அருண் விஜய்யின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து அருண் விஜய் தனது ட்வீட்டில், சாஹோவில் எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்தது. கடினமாக உழைக்கும் இந்த கூட்டணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்த பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக்கிய பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. இந்த மகிழ்ச்சிகரமான அனுபவத்தை ஆக.15 முதல் தியேட்டரில் காண காத்திருங்கள்’ என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.