Breaking: 'தளபதி 65' படத்தில் விஜய்யை இயக்குகிறாரா வெற்றிமாறன் ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 16, 2019 01:48 PM
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், விஜய் டிவி புகழ் தீனா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்நிலையில் 'தளபதி 64' படத்துக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பிருக்கலாம் எனவும் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் 2020 ஆம் வருடம், 'தளபதி 64' படத்தின் ரிலீசுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்த படத்தை முடித்த பிறகே, விஜய்யுடன் அவர் இணையும் படம் துவங்கப்படும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.