www.garudabazaar.com

LATEST: ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் சீசன் 5! கமல்ஹாசன் தோன்றும் புதிய PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

star vijay big boss season 5 kamal haasan update

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது. இந்த ஐந்தாவது சீசனும் கடந்த சீசனை போல் வருகிற அக்டோபர் மாதம் தான் தொடங்க உள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

star vijay big boss season 5 kamal haasan update

இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து முதல் ப்ரோமோ வீடியோவை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் டீசரில் சொல்லும் பிரபலமான வசனமான ‘ஆரம்பிக்கலாமா?...’ என கூறி தோன்றுகிறார். 

மேலும் பிக்பாஸ் சீசன் 5வின் புதிய லோகோவையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

star vijay big boss season 5 kamal haasan update

People looking for online information on Kamal Haasan will find this news story useful.