www.garudabazaar.com

கமல் & லோகேஷ் பங்கேற்கும் 'விக்ரம்' 100-வது நாள் வெற்றி விழா.. எங்கே? எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் 100 வது நாள் வெற்றி விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kamal Haasan Vikram Movie 100th day function details

Also Read | நடிகை அசின் மகளின் பிறந்தநாள் விழா.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Kamal Haasan Vikram Movie 100th day function details

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. தற்போது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்து உள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

Kamal Haasan Vikram Movie 100th day function details

இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்  "உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

Kamal Haasan Vikram Movie 100th day function details

விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான திரு. கமல்ஹாசன் அவர்களும் திரு. ஆர். மகேந்திரன் அவர்களும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்". என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகை பூமிகா.. வைரலாகும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie 100th day function details

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram, Vikram Movie 100th Day Function will find this news story useful.