Vilangu Others
www.garudabazaar.com

‘ரஜினியுடன் அடுத்த படமா?’ - வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் பரபரப்பு விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 20,பிப்ரவரி 2022:  அஜித் குமார் நடிப்பில் 2022 பிப்ரவரி 24 உலகம் முழுதும் வெளியாகிறது “வலிமை” திரைப்படம். இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Valimai producer Boney Kapoor official clarifiation Rajinikanth

தொழில் நுட்ப குழு

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். 

கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள்.

AK 61 

முன்னதாக போனி கபூர் தயாரிப்பிலான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், வலிமை திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தொடர்பான போஸ்டரையும் போனி கபூர் வெளியிட்டிருந்தார்.

போனி கபூர் & ரஜினிகாந்த்

இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் ஆர்டிகள் 15 இந்தி - தமிழ் ரீமேக் திரைப்படமான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தினை இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இந்நிலையில் தான் போனி கபூர் மற்றும் ரஜினிகாந்த் இணைய கூடிய புதிய தகவல்கள் பலரிடையே பரவி வந்தன.

தற்போது  இது தொடர்பாக வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள புதிய ட்வீட்டில், “ரஜினி சார் எம் பல வருட நண்பர். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். ஒருவேளை நாங்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இறுதி முடிவு எடுத்து உறுதி செய்தால், அதை முதலில் அறிவிக்கும் நபராகவே நான் இருப்பேன். எனவே யாரும் இது தொடர்பில் கசியும் தகவல்களை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தலைவர் 169

இதனிடையே விஜய் நடிப்பிலான பீஸ்ட் திரைப்படத்தினை இயக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 179 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் 179 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தையும் பீஸ்ட்,  அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Also  Read: ‘சூப்பர் மேன் பார்ட்-2 வரும்போது மியூசிக்ல வர கூடாதா?’.. இளையராஜா fansக்கு செம ட்ரீட்.. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai producer Boney Kapoor official clarifiation Rajinikanth

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, AK, Boney kapoor, Ghibran, H Vinoth, Rajinikanth, Valimai, Valimai Songs, ValimaiFromFeb24, Valimi music, ValimiFDFS, Yuvan Shankar Raja will find this news story useful.