விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெறவுள்ளது. மக்கள் அளித்திருக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

இந்த சீசனில் முதல் வார எவிக்ஷனுக்கு ஃபாதிமா பாபு, கவின், மதுமிதா, மீரா, சாக்ஷி அகர்வால், சேரன், சரவணன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசனின் இன்றைய எபிசோடிற்கான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘உண்மை முகங்களை காட்ட சொன்னா அதுக்காக இப்படியா? காட்டு காட்டுன்னு காட்டுத்தனமா காட்டிட்டீங்க! உள்ள 7 பேரு நாமினேட் பண்ணி வச்சிருக்கீங்க.. சரி அவங்க தான் அப்படின்னா நீங்க 10 கோடி ஓட்டு போட்டு உங்க பவர காட்டிட்டீங்க.. உங்கள் முதல் தீர்ப்பு என்ன’ என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும், வார இறுதி நாட்களான இன்றும், நாளையும், கமல்ஹாசன் வீட்டில் நடந்த பல விஷயங்கள் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கலந்துரையாடவிருக்கிறார்.
‘உண்மை முகத்த காட்ட சொன்னா இப்படியா..? மக்களின் பவர் என்ன?’- பிக் பாஸ் 3 புரொமோ வீடியோ வீடியோ