www.garudabazaar.com

செம்ம.. 4 முன்னணி நடிகைகள் இணையும் புதிய படம்.. பட்டையை கிளப்பும் அறிவிப்பு.. பட்டாசான டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் பிரபல தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக பிரபலமானவர்கள்.

KajalAggarwal Regina Cassandra janani raiza Karungaapiyam FL

இந்த ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே. இவரது இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் தான் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் தான்  நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர். 

தவிர, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' திரைப்படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய, தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நிறைவடையும் சூழ்நிலையில் உள்ளன. இந்நிலையில் 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது  வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ALSO READ: வெறித்தனம்!!.. பிரபல தமிழ் பாட்டுக்கு நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் .. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ViralVideo!

KajalAggarwal Regina Cassandra janani raiza Karungaapiyam FL

People looking for online information on Karungaapiyam will find this news story useful.