www.garudabazaar.com

காஜல் அகர்வால்.‌. பெரிய நிறுவனத்துக்காக.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் புதிய போட்டோஷூட் வீடியோ வெளியாகி உள்ளது.

kajal aggarwal latest photo shoot video with baby bump

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

kajal aggarwal latest photo shoot video with baby bump

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. 

திருமணத்துக்கு பின் தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ஹே சினாமிகா படத்தில் மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கினார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிப்பில் இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசானது.

kajal aggarwal latest photo shoot video with baby bump

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் காஜல் அகர்வால், நிறைமாத கர்ப்பத்துடன் புதிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். மும்பையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இந்த போட்டோ ஷூட் நடந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற போட்டோகிராபர் ஐஸ்வர்யா நாயக் இந்த போட்டோஷூட்டை ஒளிப்பதிவு செய்தார். ஆடை வடிவமைப்பை ரித்திகா கவனிக்க, சிகை அலங்காரத்தை புஷ்ரா கான் கவனித்தார். 

தொடர்புடைய இணைப்புகள்

kajal aggarwal latest photo shoot video with baby bump

People looking for online information on Baby Bump, Four Seasons Residences Mumbai, Kajal Agarwal, Kajal Aggarwal will find this news story useful.