RRR Others USA
www.garudabazaar.com

காத்துவாக்குல ரெண்டு காதல்.. Two Two பாட்டுல இதான் சமந்தா - நயன்தாரா கெட்டப்பா? வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

"என்னா வெயிலு.. அடுத்த மூனு மாசத்துக்கு.." பிகினி உடையில் கீர்த்தி பாண்டியன் பகிர்ந்த வைரல் PHOTOS..

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சென்ற ஆண்டு நிறைவுபெற்றது. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

இந்நிலையில் இந்த படத்தின் Two Two எனும் பாடலின் செட், காஸ்டியூம் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. நடன கலைஞர் கிறிஸ்டினோ அருள் இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் உள்ளனர்.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

காஜல் அகர்வாலின் கர்ப்ப கால வேதனைகள்... உதவிய உற்ற நண்பன்! முக்கிய தகவல்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vaakula Rendu Kaadhal Movie TWO TWO song BTS Making Image

People looking for online information on Anirudh Ravichander, Kaathu Vaakula Rendu Kaadhal, Nayanthara, Redin Kingsley, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.