www.garudabazaar.com

BREAKING: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட ரிலீஸ்! தியேட்டர்லயா? OTT-லயா? எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Kaathu Vaakula Rendu Kaadhal Direct OTT Release

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது.

Kaathu Vaakula Rendu Kaadhal Direct OTT Release

பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சில நாட்களுக்கு முன் நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Direct OTT Release

இந்த படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும், சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தியேட்டரிக்கல் ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Kaathu Vaakula Rendu Kaadhal Direct OTT Release

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vaakula Rendu Kaadhal Direct OTT Release

People looking for online information on Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.