Udanprape others
www.garudabazaar.com

“சமந்தாவின் புதிய அவதாரம்!”... இரட்டை இயக்குநர்கள் இயக்கும் சமந்தாவின் அடுத்த பட அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டு புதிய பெயரிடபடாத  படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு, இந்த தசரா பண்டிகையில் நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.

Samantha join hands mazhai producer dual directors

இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும். அதில் ஒரு படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது. இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த 'மழை' படத்தை தயாரித்தவர்.

தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத், இப்படத்தை பற்றி கூறுகையில், “சமந்தாவை இந்த படத்தில் ஒரு புது அவதாரத்தில் காண  நாங்கள் மிகுந்த ஆவலாக உள்ளோம். இந்த படத்தை பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது, ஆனால் இந்த படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக கூற முடியும். இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன்  இந்த கதையை என்னிடம் கூறியபோது, நான் மிகுந்த  ஆச்சர்யத்திற்கு உள்ளானேன். அவர்கள் கதை சொன்ன விதமும், அதை உருவாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது.

இருவரும் இணைந்து இந்த கதையை எழுதியுள்ள போது, அவர்கள் இருவரும் இணைந்து, இதை திரையில் அழகாக கொண்டு வரவும் முடியும் என நான் நம்புகிறேன். அதே போல் இரு இயக்குனர்களுக்கும், அவர்களுடைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது” என்றார்.

மேலும் சமந்தாவை நயாகியாக இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற யோசனை யாருடையது என்ற கேள்விக்கு பதில் கூறிய தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத், “இது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. சமந்தாவை இந்த திரைப்படத்திற்கு அழைத்து வருவது, படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும்  என நான் நம்பினேன். இயக்குநர்களும் அதையே நினைத்தார்கள். கதை தயாரான உடன் நாங்கள் சமந்தாவிடம் கூறினோம்.

அவரும் கதை பிடித்து உடனே ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படபிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Johnson PRO.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha join hands mazhai producer dual directors

People looking for online information on Mazhai, Samanatha new, Samantha will find this news story useful.