தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருவதோடு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் , இன்று மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது தனது பதிவில், “என் அன்புத் தம்பி நடிகர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
என் அன்புத் தம்பி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2019