www.garudabazaar.com

#JR28: ஜெயம் ரவியின் Role குறித்த செம அப்டேட்! படத்தில் இணைந்த இளம் நடிகை..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன். இவர் ஜெயம் ரவி நடிப்பிலான தமது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

JR28 Jayam Ravi N.Kalyanakrishnan massive update

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம்  ‘பூலோகம்’. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். இந்த திரைப்படத்துக்கு மறைந்த பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுதியிருந்தார்.

சர்வதேச சந்தையில் குத்துச் சண்டை போட்டி மீதான மோகத்தை உருவாக்கி, அதை வியாபாரம் செய்யும் நோக்கத்தை தீவிரமாக விமர்சிக்கும் நாயகனின் கண்ணோட்டத்தில், இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஜெயம் ரவியை இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.

இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை நடந்துகொண்டிருந்தது. ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தின் நடிகர், நடிகையர் பற்றிய விபரங்கள் தெரியந்துள்ளன.

அதன்படி, ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இந்த படத்தில் ஏற்கனவே இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை தன்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே ஜெயம் ரவி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவரசராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

JR28 Jayam Ravi N.Kalyanakrishnan massive update

People looking for online information on Jayam Ravi, JayamRavi, JayamRavi28, JR28, N.Kalyanakrishnan will find this news story useful.