www.garudabazaar.com

Breaking: இவர் படத்துல ஜீவா.. ஜெய்.. ஸ்ரீகாந்த்.. காம்பினேஷனே களைகட்டுதே! தொடங்கிய பூஜை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Sundar C: இயக்குநர் சுந்தர்.சி-யின் அடுத்த படமும், அதில் இணையவிருக்கும் மல்டி ஸ்டார்கள் பற்றிய தகவல்களும் குறித்த ஏற்கனவே நாம் பிரத்தியேகமாக குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தொடங்கப்படுவது குறித்த புகைப்படங்களுடன் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

வெகுஜன பொழுதுபோக்கு படங்கள்

பொதுவாகவே பொதுமக்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களாகவே, அதாவது வெகுஜன ரசிகர்களின் ரசனையை திருப்தி படுத்தும் விதமாக உருவாகி வெற்றி பெறுபவை இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்திலான திரைப்படங்கள்.

Also Read: பாஜகவின் அதிரடி 'மூவ்'.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இதுதான் காரணமா? உடைத்த அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி.

அரண்மனை, கலகலப்பு படங்கள்

தற்போது தம் படங்களிலும் பிறரது திரைப்படங்களிலும் நடிக்கவும் செய்யும் இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி முன்னதாக தம்முடைய தொடர் வரிசை திரைப்படமான ‘அரண்மனை-3’ திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை குஷ்பூ சுந்தர்.சியின் Avni Cinemax தயாரித்திருந்தது.

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

அரண்மனை ஒரு ஹாரர் ஃபிக்‌ஷனாக உருவான திரைப்படம். இதேபோல், எதார்த்தமான கதைக்களத்தை கையில் எடுத்துக்கொண்டு சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகும் காமெடியும் கலகலப்புமூட்டும் திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடித்தமானவை.

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

அந்த திரைப்படங்களின் ட்ரீட்மெண்ட் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கு பொழுதுபோக்கு படங்களாக இருப்பதால் சுந்தர். சியின் அந்த ரக படங்கள் மீதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதும் உண்டு. அந்த வகையில் கலகலப்பு என்கிற திரைப்படம், அதன் தலைப்பிலேயே அந்த தன்மையை கொண்டிருந்தது. படமோ தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தது.

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

அதன்படி கலகலப்பு திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் நடிகர்கள் விமல், மிர்ச்சி சிவா மற்றும் சந்தானத்தின் கலக்கலான கூட்டணியும், சோர்ந்து போகாத திரைக்கதையும் அந்த படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியமைத்தது. சுந்தர்.சியின் பாணியிலான டைரக்‌ஷன் என்று தனித்துவமாக பேசப்பட்ட அப்படத்தின் தொடர்வரிசை படமாக கலகலப்பு படத்தின் 2-ஆம் பாகம் வெளியானது.

இந்த திரைப்படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் மிர்ச்சி சிவா கூட்டணி இணைந்திருந்தது. இந்த திரைப்படமும், எப்போதும் போல சுந்தர்.சி படமென்றால் லாஜிக்கை மறந்து சிரிக்க முடியும் என்கிற பெயர் பெற்று பொழுதுபோக்கு படமாக ரசிகர்களை சென்றடைந்தது.

புதிய பட பூஜை

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

இந்நிலையில் தான், சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.  குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் பூஜையில் இப்பட நடிகர்கள் மற்றும் இயக்குநர் சுந்தர். சி கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த்

நடிகர் ஜெய், ‘சிவ சிவா’ என்கிற திரைப்படத்திற்கு முதன் முறையாக இசையமைத்து நடித்து வருகிறார். இதேபோல், நடிகர் ஜூவா, அண்மையில் வெளியான ‘83’ என்கிற கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று PAN INDIA படத்தில் நடித்து அசத்தினார். நடிகர் ஸ்ரீகாந்த், ‘தி பெட்’ எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்தார்.

Also Read: மாளும்மா.. மொத்த மாலத்தீவும் விழுந்துருச்சு!.. படு கிளாமர் பிகினி ஃபோட்டோ! இதுவரை வந்ததுலயே இது வேற மாரி..

தொடர்புடைய இணைப்புகள்

jiiva Jai Srikanth in next Sundar C direction pooja pics

People looking for online information on Avni Cinemax, Jiiva, Khushboo, Mirchi Shiva, Srikanth, Sundar C, This is 83 will find this news story useful.