மாதவனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல டிவி ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

Jagan to act in Madhavan's Rocketry The Nambi Effect

கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்ரன், இந்த படம் மூலம் மாதவனுடன் இணைந்துள்ளார்.  இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ஜெகன் இந்த படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம். இவருக்கான காட்சிகள் ஜூன் மாதம் படமாக்கப்பட்டதாம். அயன், கோ உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஜெகன், கடவுள் பாதி மிருகம் பாதி, கனெக்ஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.