யாஞ்சி யாஞ்சி... 'விக்ரம் வேதா' ஜோடி இணையும் படத்தின் Fresh Update!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 25, 2019 10:52 AM
இஸ்ரோ விஞ்ஞானியான நமபி நாராயணன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாதவனின் மனைவியாக சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், ஹிந்தி வெர்ஷனில் ஷாரூக் கானும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கின்றனராம்.
இதனையடுத்து மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து சூப்பர் ஹிட்டான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் விக்ரம் வேதா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும், இதனை புதுமுக இயக்குநர் திலீப் குமார் இயக்குவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படம் தற்போது கதை விவாதத்தில் தான் இருக்கிறது. இந்த படம் செப்டம்பரில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.