சுரேஷை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்... வைரலாகும் தகவல்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இல்லை என்று கமல் அறிவித்தார். அதற்கு முந்தைய வாரம் வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் எதுவும் நடக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் குழம்பி வருகின்றனர்.

அந்தவகையில் வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பாடகி சுசித்ரா. வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பு உண்டாக்கினார். இந்நிலையில் அவர் பாலாவுடன் நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுரேஷை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்... வைரலாகும் தகவல்..! வீடியோ