www.garudabazaar.com

BIGGBOSS-க்கு புது லுக்கில் வந்த கமல்ஹாசன்.. அதுக்கு காரணம் இந்த இயக்குனர் தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகி உள்ளது.

Indian 2 Kamal Haasan New Look in Biggboss Season 6

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 படம் பற்றி கமல் பேசியது வைரலாகி வருகிறது.

Indian 2 Kamal Haasan New Look in Biggboss Season 6

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.

Indian 2 Kamal Haasan New Look in Biggboss Season 6

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது லுக்கில் வந்த கமல்ஹாசன், தனது லுக் குறித்து ரசிகர்களிடம் பேசினார். அதில், "தாடியுடன் வந்திருப்பேன். ஆனால் அதை இயக்குனர் ஷங்கர் எடுத்துக்கிட்டார்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Kamal Haasan New Look in Biggboss Season 6

People looking for online information on BIGGBOSS season 6, Indian 2, Kamal Haasan will find this news story useful.