‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இயக்குநராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, அடுத்து 3வது ஹிட்டுக்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள ராணா, மிகவும் பிரபலமான அவரது ‘கெக்க பெக்க’ குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனை பலவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தெரிகிறது.
We hit two in a row and we are gearing up for a hatrick ✌🏻 #MeesayaMurukku #NatpeThunai & now #HHT3 - #SundarC & #HiphopTamizha once again 😊 pic.twitter.com/JXIhE3RYUY
— Hiphop Tamizha (@hiphoptamizha) June 25, 2019