ஹிப்ஹாப் தமிழாவின் லேட்டஸ்ட் வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Title Track video song from Hiphop Tamizha Adhi's Natpe Thunai has been released

அவ்னி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான 'நட்பே துணை' திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்தார்.

இப்படத்தில் பாண்டியராஜன், கரு.பழனியப்பன், ஷாரா, ஆர்ஜே விக்னேஷ், எருமசாணி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டிராக் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. வடுகம் சிவக்குமார் எழுதிய இந்த பாடலை சஞ்சித் ஹெக்டே, கௌஷிக் கிரிஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழாவின் லேட்டஸ்ட் வீடியோ சாங் இதோ வீடியோ