நடிகை ஹன்ஷிகாவுக்குக் கிடைத்துள்ள லக்கி ப்ரைஸ் இதுதான்! க்யூட் லுக்ஸ் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா குறித்த அச்சம் உலகம் எங்கும் நிலவி வந்தாலும், இந்தியாவில் எடுக்கப்பட்ட அரசு நடிவடிக்கை மற்றும் நோய் பரவுவதைத் தடுக்க செய்யப்பட்ட முயற்சிகள், இப்பாதிப்பிலிருந்து மக்களைப் பெருமளவில் தப்ப வைக்கின்றன.

Hansika Motwani new GIF Avatars

வெளியே யாரும் வர இயலாத நிலையில், சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பொழுதினை போக்கி வருகின்றனர். சினிமா பிரியர்களுக்கு அமேஸான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி ப்ளாட்ஃபார்ம்கள் கைகொடுக்க, மற்றவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், டிக் டாக் மற்றும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களே வசிப்பிடமாகி வருகிறது. மெய்நிகர் உலகில் வெகு நேரம் உலவியும், வீடியோ கால்களில் நண்பர்களிடம் பேசியும், இன்ஸ்டாவில் நேரலையில் பேசியும் தங்கள் பொழுதுகளைப் போக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்த் திரையுலகம் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் தனது நடிப்பாற்றலுக்கும், க்ளாம் லுக்குக்கும் புகழ் பெற்ற நடிகை ஹன்ஷிகாவுக்கு தற்போது ஒரு பெருமை கிடைத்துள்ளது. வாட்ஸப் மற்றும் மெசஞ்சர்களில் பயன்படுத்தக் கூடிய  GIF-ல் இமேஜில் தற்போது அவரது அபிநயங்கள் இடம்பெற்றுள்ளன. அழுவது, சிரிப்பது, ஸாரி கேட்பது, ஸ்டைல் லுக் விடுவது என வகை வகையான ஹன்ஷிகா பிங்க் கலர் உடையில் அசத்துகிறார். மேலும் சொந்த GIF-ஐப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை ஹன்ஷிகா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ரசிகர்களுக்கு இச்செய்தி கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor