"மக்களால் நான்.. மக்களுக்காக நான்"... - ‘குயீன்’ லுக்கில் கம்பீரம் காட்டிய ரம்யா கிருஷ்ணன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 05, 2019 05:10 PM
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் வெப் சீரிஸில் ஜெயலலிதா கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கி வரும் ‘குயீன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் MX ப்ளேயர் பிளாட்ஃபார்மில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 4 மொழிகளில் தயாராகும் ‘குயீன்’ வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று (டிச.5) ‘குயீன்’ வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்துள்ள ரம்யாகிருஷ்ணன் நடை,உடை,பாவனை பேச்சு என அனைத்திலும், தனக்கே உரிய ஸ்டைலிலும், ஜெயலலிதாவின் பிம்பத்தையும் கண்முன் நிறுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த டிரைலரின் மூலம் வெப் சீரிஸின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே கங்கனா ரனாவத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘தலைவி’ திரைப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கி வருகிறார். மேலும், இயக்குநர் பிரியதர்ஷினி நடிகை நித்யா மேனனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் உருவாக்கி வருகிறார்.
"You need not birth children to be a mother!"
Here's the story of the Queen who was a mother figure to millions.#QueenIsComing on 14th December.@meramyakrishnan @menongautham @Murugesanprasad@Indrajith_S @Ace2Three @fanfight_app
#Queen #MXOriginalSeries #MXPlayer pic.twitter.com/rlIPRvnvtf
— MX Player (@MXPlayer) December 5, 2019