ரசிகர்களின் மனதை துளைத்ததா இந்த தோட்டா..? - தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ Public Review

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கவுதம் மேனன் இயக்க தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் 3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இன்று (நவ.29) ரிலீசாகியுள்ளது.

Dhanush and Gautham Menon's Enai Nokki Paayum Thota Public Review

எஸ்கேப் ஆர்டிஸ்ட், ஒன்றாக எண்டர்டெயின்மென்ட், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைக்க ஜோமோன் டி.ஜான், மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்து பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

முதன் முறையாக இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், சில காரணங்களால் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது இப்படத்தின் சிக்கல் தீர்க்கப்பட்டு திரைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பார்ப்பை கூடுதலாக்கி வைத்திருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வின் FDFS காட்சியை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படம் குறித்த தங்களது விமர்சனத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். அதில், தனுஷ் மற்றும் கவுதம் மேனனின் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இந்த இணை மீண்டும் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

கவுதம் மேனனின் சிக்னேச்சரான காதலும், ஆக்ஷனும் படத்தில் இருந்ததாகவும் கூறினர். சிலர் கலவையான விமர்சனங்களையும் தெரிவித்தனர். ரசிகர்களின் விமர்சனத்தை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்..!

ரசிகர்களின் மனதை துளைத்ததா இந்த தோட்டா..? - தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ PUBLIC REVIEW வீடியோ