LATEST: பிரேமம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தின் வைரலாகும் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

gold movie bts image went viral on social media

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர். அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் (2015) படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார்.

gold movie bts image went viral on social media

முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

gold movie bts image went viral on social media

இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். 

gold movie bts image went viral on social media

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுத்த BTS (Behind The Scene) புகைப்படத்தை படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் பிரித்வராஜ் சுகுமாறனுடனும், அவரது அம்மாவும் நடிகையுமான மல்லிகா சுகுமாறனுடனும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இருக்கிறார். இந்த படத்தில் நடிகை மல்லிகா நடிப்பது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

gold movie bts image went viral on social media

சமீபத்தில் நடிகை மல்லிகா, தன் மகன் பிரித்வி ராஜ் மோகன்லாலை வைத்து இயக்கி கோண்டிருக்கும் Bro Daddy படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த Gold படத்தை நடிகர் பிரித்வி ராஜே தனது நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

gold movie bts image went viral on social media

People looking for online information on Alphonse Puthren, Nayanthara, Prithvi Raj will find this news story useful.