www.garudabazaar.com

கோலிவுட் ’குஷி’ , டோலிவுட் 'பாகுபலி', ஹாலிவுட் ’டைட்டானிக்’ - அதுலயும் ஹைலைட் இதான்.. KRK டிரைலர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From kushi to titanic many movie references in krk trailer

நயன்தாரா- விஜய் சேதுபதி- சமந்தா…

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.  படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற பப் பவுன்சர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

From kushi to titanic many movie references in krk trailer

கவனம் ஈர்த்த ப்ரமோஷன்கள்…

இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

From kushi to titanic many movie references in krk trailer

டிரைலரில் ஹிட் படங்களின் Reference…

டிரைலரில் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவையாக பல ஹிட் படங்களின் ரெபரன்ஸ்களை விக்னேஷ் சிவன் உருவாக்கியுள்ளார். குஷி படத்தில் இடம்பெற்ற பிரபலக் காட்சியான கோயிலில் விளக்கு அணையாமல் இருத்தல் காட்சியில் மூவரும் இடம்பெறும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

From kushi to titanic many movie references in krk trailer

குஷி முதல் டைட்டானிக்…

ஏற்கனவே படத்தின் போஸ்டர்களில் சத்யா படத்தின் வலையோசை பாடலில் கமலும் அமலாவும் படிக்கட்டுகளில் நின்று பேருந்து பயணம் செய்யும் காட்சியை போலவே ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்கள். அது சம்மந்தமான காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பாகுபலியில் பிரபாஸும் அனுஷ்காவும் அம்புவிடும் காட்சி, டைட்டானிக் கப்பல் காட்சி ஆகியவற்றையும் ரி கிரியேட் செய்துள்ளனர்.

From kushi to titanic many movie references in krk trailer

Are you okay baby…

எல்லாவற்றையும் விட ஹைலைட்டாக விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெறும் ‘are you okay baby’ என்ற வசனத்தை இதிலும் விஜய் சேதுபதி பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நானும் ரௌடிதானில் நயன்தாரா ‘என்ன யாராவது ரௌடிகிட்ட கூட்டிட்டு போக முடியுமானு’ கேட்கும் வசனம் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல படங்களின் ரெபரன்ஸ்களை ஆங்காங்கே நகைச்சுவையாக பொருத்தியுள்ளார் விக்னேஷ் சிவன். டிரைலரில் இருப்பதை போல படத்தில் இன்னும் அதிகமாக இதுபோல ரெபரன்ஸ்கள் இருக்குமா என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

From kushi to titanic many movie references in krk trailer

டிரைலரில் என்ன இருக்கிறது…

ஏற்கனவே வெளியான ப்ரமோஷன்களில் கணித்தது போலவே விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரையும் காதலிக்க, இருவரும் அவரைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறார். இறுதியில் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது டிரைலர். கலகலப்பான இந்த டிரைலர் இப்போது இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

From kushi to titanic many movie references in krk trailer

People looking for online information on Kathu vakkula rendu kadhal, Nayanthara, Samantha, Trailer will find this news story useful.