''சூப்பர் ஸ்டார் தான் நம்மளோட தலைவராக இருக்கணும்'' - பிரபல நடிகை கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 09, 2019 01:51 PM
விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஜயலெக்ஷ்மி. இவர் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரிடமும் பரீட்சையமானார்.
இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பெங்களூரில் மிகவும் கஷ்டப்படுவதாகவும், சிலர் தனது வாழ்வை சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது கஷ்டங்களை சொல்லவிரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், இன்று காலை தலைவர் என்கிட்ட பேசுனாரு. எதுக்குமே பயப்பட வேணாம் என்று அவர் கொடுத்த கான்ஃபிடன்ட் எனக்கு உற்சாகத்தை அளித்தது.
அவர் என் பிரச்சனைகளை கேட்டவிதம், ஆறுதல் சொன்ன விதம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை. அவர் சிறந்த மனிதாபிமானம் மிக்க மனிதர். இப்படி நல்ல மனிதர் தான் நம்மளோட தலைவராக இருக்கணும் என்றார்.
''சூப்பர் ஸ்டார் தான் நம்மளோட தலைவராக இருக்கணும்'' - பிரபல நடிகை கருத்து வீடியோ