Valimai BWE
www.garudabazaar.com

வலிமை படம் பார்த்து அருண் விஜய் சொன்ன விமர்சனம்! வைரலான ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

Arun Vijay Watching Ajith Kumar Movie Valimai FDFS

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

Arun Vijay Watching Ajith Kumar Movie Valimai FDFS

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க நடிகர் அருண் விஜய் FDFS காட்சிக்கு சென்று படம் பார்த்துள்ளார்.

Arun Vijay Watching Ajith Kumar Movie Valimai FDFS

படம் பார்த்துவிட்டு டிவிட்டரில் "எல்லா வழிகளிலும் அஜித் சாரின் Screen Presence!!💪🏽❤ டாப் நாட்ஷ் ஆக்ஷன் குறிப்பாக பைக் ஸ்டண்ட்...இறுதியில் ஒரு தேவையான செய்தி... வலிமை படம் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய விருந்தாகும்... வலிமை டீமுக்கு பாராட்டுக்கள்." என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Watching Ajith Kumar Movie Valimai FDFS

People looking for online information on Ajith Kumar, AK, Arun Vijay, Valimai, Valimai FDFS will find this news story useful.