www.garudabazaar.com

இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ இந்த செவரு!..தெறிக்கவிடும் #BiggBoss எலிமினேஷன் மீம்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டனர். முன்னதாக திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறினார். 

elimination if close to this biggbosstamil5 contestent meme

இதனிடையே அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்து விளையாடி வருகிறார். அவரைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர், பிரபல நடிகரும் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் ஆகியோர் அடுத்தடுத்து வருகை தந்துள்ளனர். 

elimination if close to this biggbosstamil5 contestent meme

இந்நிலையில் பாவனியுடப் நெருக்கமாக இருந்த போட்டியாளர்களான அபிஷேக், மதுமிதா, இசைவாணி மற்றும் சுருதி அனைவருமே அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகியுள்ளதை சுட்டிக்காட்டி மீம்கள் வைரலாகி வருகின்றன. 

elimination if close to this biggbosstamil5 contestent meme

பாவனிக்கும் தன் நண்பர்கள் தன்னை விட்டு செல்பவர்கள் பற்றிய கவலை இருந்ததை சுருதி மற்றும் மதுமிதா வெளியேறிய பின் காண முடிந்தது. எதையோ ஒன்றை மிஸ் பண்ணுவது போல் அவர் இருப்பதாக, கடைசியாக நடந்து முடிந்த பள்ளிக்கால டாஸ்க்கில் பாவனியின் பெர்ஃபார்மென்ஸ் குறித்து சக போட்டியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

elimination if close to this biggbosstamil5 contestent meme

ஆனால் தற்போது அபிஷேக் எண்ட்ரி கொடுத்த பின், பாவனியிடம், “என் மீது ஏதேனும் தவறு இருப்பதாக உனக்கு தோன்றுகிறதா?” என கேட்டார். அதற்கு பதில் சொன்ன பாவனி, “எனக்கும் அதேதான், எல்லாரும் சொல்றாங்க, உன் மேல என்ன தப்பு இருக்குனு எனக்கு தோணுது. நீ எந்த தவறுமே செய்யவில்லை” என குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார். 

elimination if close to this biggbosstamil5 contestent meme

இதனிடையே,  பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் உடல்நலம் சீராகி வருவதை அடுத்து, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

elimination if close to this biggbosstamil5 contestent meme

People looking for online information on Abhishek raaja, Abhishek Raja, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, IsaiVaani, Isaivani, Madhumitha, Shruthi, Suruthi will find this news story useful.