RRR Others USA
www.garudabazaar.com

"மையமா இருந்தா நீங்க வலது சாரி தான்..." - கவனம் ஈர்க்கும் வெற்றிமாறனின் அரசியல் பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற International Film Festival of Kerala 2022ல் சினிமா பற்றிய கலந்துரையாடல் நடந்தது. இதில் மலையாள இயக்குனர்கள் லிஜோ ஜோசப் பெலிஸ்ஸரி, கமல், சிபி ஆகியோருடன் வெற்றிமாறனும் கலந்துகொண்டார்.

Director Vetrimaaran talks about right wing & left wing politics

இதில் வெற்றிமாறன் பேசியது, "இன்று உலகம் பிளவுபட்டுள்ளது;  நீங்கள் இடதுசாரி அல்லது வலதுசாரி என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும், மையம் என்று ஒன்று இல்லை.  நீங்கள் இல்லாத மையத்தை தேர்வு செய்தால், நீங்கள் வலதுசாரிகளை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று கூறியுள்ளார். அதோடு ஆணின் கண்ணோட்டத்தில் கதை சொல்வதை  குறித்தும் பேசியுள்ளார்.

Director Vetrimaaran talks about right wing & left wing politics

இந்நிகழ்வில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூறுகையில், திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தைப் போலல்லாமல், OTT இயங்குதளங்கள் பார்வையாளர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய சுதந்திரம் அளிக்கின்றன என கூறினார். மேலும், "பெரிய திரை அல்லது சிறிய திரைப்படங்களை எங்கு பார்க்க வேண்டும் என்பதை பார்வையாளர்கள் தீர்மானிக்கும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, தற்போது நடிகர் மம்முட்டி நடிப்பில் "நண்பகல் நேரத்து மயக்கம்" எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது

இதேபோல் இயக்குனர் வெற்றிமாறனும் வாடிவாசல் படத்துக்காக சூர்யாவுடன் தன்னுடைய கதைகளுக்கான Test Shoot-ல் இறங்கிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. கலைபுலி S தாணு தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். அசுரன், ஜெய் பீம் படங்கள் மூலம் பிரபலமான நடிகர் தமிழரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது.‌

Director Vetrimaaran talks about right wing & left wing politics

இதேபோல் மலையாளத்தில் உருவாக்கி மக்களிடத்தில் வெற்றியும் மற்ற இடங்களில் விருதுகளையும் குவித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெல்லிசேரி. இவர்கள் இருவரும் அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச கேரள திரைப்பட விழாவில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜய் மது (Ajay Madhu) கிளிக்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Vetrimaaran talks about right wing & left wing politics

People looking for online information on Centrism, Karl Marx, Leftism, Politics, Rightism, Vaadivaasal, Vetrimaaran, Viduthalai will find this news story useful.