விக்ரம் பற்றி த்ருவ் எமோஷனல் - ''நான் துவண்டு போன போது...". ஆதித்ய வர்மாவில் என்ன நடந்தது.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் த்ருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படம் குறித்தும் அதில் விக்ரமின் பங்கு குறித்தும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

விக்ரம் குறித்து த்ருவ் எமோஷனல் | dhruv vikram emotional statement about vikram and aditya varma

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விக்ரம். இவரின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இது உருவானது. இத்திரைப்படத்தில் த்ருவ்வின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்தின் போது நடந்த விஷயங்களை த்ருவ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த தனது பதிவில், 'இன்று பத்து லட்சம் பேருக்கு மேல் என்னை தெரிந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரு மனிதனின் அயராத உழைப்பும், பல சிரமங்களை தாண்டி படத்தை எடுத்த முயற்சியும் தான் காரணம். நான் நம்பிக்கையை இழந்து துவண்டு போன போது, பொறுப்பை அவர் கையில் எடுத்து கொண்டு, எனக்கான வழி அமைத்து கொடுத்தார். முன்னோக்கி செல்ல நாம் முடிவெடுத்தால், எதுவும் சாத்தியம் என்பதை அவர் புரிய வைத்தார். ஆதித்ய வர்மா ரீமேக் படமாக இருந்தாலும், என் மனதுக்கு நெருக்கமான திரைப்படமாக இருப்பதன் காரணம், நான் ரசித்தவரிடம் இருந்து வேலையை கற்று கொண்டதுதான்.  உங்களை போல ஒரு லெஜன்ட்டாக வர முடியுமா என தெரியவில்லை, ஆனால் நம் கனவுகளை நிஜமாக்க நிச்சயம் உழைப்பேன். நன்றி ஆதித்ய வர்மா மற்றும் விக்ரம்' என அவர் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If I’m able to address over a million people today, it is only because of one man’s tireless work and grit toward making this film against all odds. Even when I was losing hope and sight of a bigger picture, he took it upon himself to show me the way, to show me that life will make you doubt yourself, It will push you to the edge of giving up, but anything is possible if you decide to work forward and never look back. Adithya Varma was all you Dad. It may have been a remake but I know it will remain the film that’s closest to my heart because through this process, I got to learn the craft from someone who’s work I’d been a fan of for as long as I can remember. And that was you. Adithya was a mere concept in your brain that you brought to life for me. Your vision put me here today. And I promise to work toward making our dreams come true. I know I can never be the legend that you are, but I say that with so much pride. Thank you for AV. And @the_real_chiyaan and I thank you all again for a million 🙏🏻

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Entertainment sub editor