www.garudabazaar.com

LATEST: தனுஷ் நடிக்கும் #D44 படத்தின் முக்கியமான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷுக்கு கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படம்  திரையரங்கில் வெளியானது. கர்ணன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் கடைசியாக Netflix இல் வெளியான 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

dhanush sun pictures new movie shooting update

தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

dhanush sun pictures new movie shooting update

நேற்று (04.08.2021) இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஸி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

dhanush sun pictures new movie shooting update

அதனைத்தொடர்ந்து படத்தின் அடுத்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதனை சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் தலைப்பும் இன்று (05.08.2021) வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் பத்திரிக்கை நிருபராக தனுஷ் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

dhanush sun pictures new movie shooting update

People looking for online information on D44, Dhanush, Sun pictures will find this news story useful.