darbar USA others

தனுஷின் 'அசுரன்' குறித்து வெற்றிமாறன் அதிரடி - ''தனுஷ் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி கிரிகியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து , வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி  வெளியான படம் அசுரன். இந்த படம்  தற்போது 100 வது நாளை நிறைவு செய்துள்ளது.

Dhanush in Asuran 100th Day function, Vetrimaaran Speaks about his experience to the film

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, டிஜே , கென் கருணாஸ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் விழாவில், ''இந்த படத்துல எனக்கு இருந்தை விட தனுஷிற்கு இந்த படத்தின் மேலும் அந்த கேரக்டரின் மேலும் தனுஷிற்கு அதிக நம்பிக்கை இருந்தது. இந்த வேடத்தை தனுஷ் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு. அத அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அப்போது அவர் ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டு வந்திருந்தாரு. காரணம் அதுவாகக் கூட இருக்கலாம் பேசிட்டு இருந்தோம்'' என்றார்.

தனுஷின் 'அசுரன்' குறித்து வெற்றிமாறன் அதிரடி - ''தனுஷ் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு'' வீடியோ

Entertainment sub editor