www.garudabazaar.com

தனுஷ்.. ஆக்ரோஷம் .. கையில் பேனாவுடன்.. வெளியான மோஷன் போஸ்டர்! டெரிஃபிக் பிஜிஎம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

dhanush new movie maaran motion poster released

துருவங்கள் பதினாறு என்னும் திரைப்படம் மூலம், இளம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் கார்த்திக் நரேன். முதல் படமே, மிகச் சிறப்பான பெயர் வாங்கிக் கொடுத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து, 'நரகாசூரன்' என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்திருந்தார்.

ஆனால், அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து, அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானிஷங்கர் நடித்திருந்த 'மாபியா' என்னும் திரைப்படத்தையும் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.

அதிகம் வைரல்

தொடர்ந்து, நவராசா என்னும் தமிழ் அந்தாலஜியில், 'புராஜக்ட் அக்னி' என்னும் பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இந்நிலையில், நடிகர் தனுஷை வைத்து, 'மாறன்' என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி, அதிகம் வைரலாகியிருந்தது.

வெளியான மோஷன் போஸ்டர்

மேலும், இந்த திரைப்படம், நேரடியாக 'ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில், கண்ணில் ஆக்ரோஷம் கலந்து, தனுஷ் நிற்கும் இந்த மோஷன் போஸ்டர் தற்போது, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படக்குழு

மாறன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ளார்.

தனுஷின் கடைசி படம்

கார்த்திக் நரேனுடன் இணைந்து, மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் சுஹாஸ் - ஷர்ஃபு மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர், மாறன் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர்.

மாறுபட்ட நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகர் தனுஷ் நடிப்பில், கடைசியாக, 'அத்ரங்கி ரே' என்னும் ஹிந்தி திரைப்படம் (தமிழில் 'கலாட்டா கல்யாணம்') வெளியாகியிருந்தது. இதில் அவருடன் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்.. ஆக்ரோஷம் .. கையில் பேனாவுடன்.. வெளியான மோஷன் போஸ்டர்! டெரிஃபிக் பிஜிஎம்.. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

dhanush new movie maaran motion poster released

People looking for online information on Atrangi Re, Dhanush, GV Prakash Kumar, Karthick Naren, Maaran, Malavika Mohanan, P Samuthirakani will find this news story useful.