www.garudabazaar.com

விஜய், சிவகார்த்திகேயன் வரிசையில் தனுஷ்- வெளிவந்த முதல் பக்கா மாஸான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், சிவகார்த்திகேயன் வரிசையில் தனுஷும் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 

Dhanush direct telugu movie title look to be released tomorrow

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மாஸ் ஹிட் ஆவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரை பற்றி சூப்பரான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் இவர்,தெலுங்கில் அறிமுகமானால் எப்படி இருக்கும் அதுவும், நேரடி தெலுங்கு படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

Dhanush direct telugu movie title look to be released tomorrow

நடிகர் தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, சித்தாரா என்டர்டைன்மென்ட் சார்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர் இயக்கிய ரங் தே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நிலையில், தனுஷை வைத்து தற்போது படம் இயக்கப் போவதாக அதிகாரபூர்வ தகவல் இணையதளத்தை பதம் பார்த்து வருகிறது. இந்தப் படம் நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழிலும் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Dhanush direct telugu movie title look to be released tomorrow

இந்த படத்திற்கான அறிவிப்பை  நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் பட்டையை கிளப்பி வந்த தனுஷ், தற்போது தெலுங்கிலும் நடிக்க இருப்பது அவர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை காலை 9:36 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய், பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் அனுதீப் இயக்கத்தில் காமெடி திரில்லர் தெலுங்கு படம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது தனுஷும் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush direct telugu movie title look to be released tomorrow

People looking for online information on Dhanush, Dhanushtelugumovie, Sivakarthikeyan, Vijay will find this news story useful.