www.garudabazaar.com

தனுஷின் ஹாலிவுட் படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்.. தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 19 வருடங்கள் தம்முடைய திரை பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.

Dhanush latest shooting stills from the gray man viral

தமிழ் தொடங்கி ஹிந்தி படங்கள் வரை நடித்த தனுஷ் அண்மையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக பெரிதும் கவனிக்கப்பட்டார். இவற்றுள் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

அன்மையில் அறிவிக்கப்பட்ட 2019-ஆம் வருடத்துக்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாக அசுரன் தேர்வானது. இதேபோல் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருந்தார். இதனிடையே நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பக்கீர்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது, ‘The Gray Man’என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்ததை அடுத்து மாரியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைவதாகவும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

ALSO READ: களைகட்டும் 93வது ஆஸ்கர் விருதுகள்.. சிறந்த இயக்குநர் இவர் தான்.. Tenet-க்கு என்ன விருது தெரியுமா?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush latest shooting stills from the gray man viral

People looking for online information on Asuran, Dhanush, Karnan, The Gray Man will find this news story useful.