''ஒரே சிட்டியில் இருந்தாலும் உங்கள பார்க்க முடியல'' - செல்வராகவன் மற்றும் தனுஷின் சகோதரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது.

Dhanush and Selvaraghavan's Sister Karthika Karthik Shares a emotional note | தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரி, அவர்களது குடும்பம் குறித்த

இதனையடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன், லால், '96' புகழ்  கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகா கார்த்திக் தனது குடும்ப  புகைப்படத்தை பதிவிட்டு, ''என் வாழ்க்கையில் இதுபோல் நாம் பிரிந்து இருந்ததில்லை. ஒரு மாதத்தில் இரண்டுமுறையாவது சந்தித்து விடுவோம். ஆனால் ஒரே நகரத்தில் இருந்தாலும் நாம் இப்பொழுது பிரிந்து இருக்கிறோம். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு  இப்பொழுது உங்களை மிஸ் பண்றேன். உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை தவிர இந்த உலகத்தில் முக்கியமானது எதுவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor