Counting Starts...!- சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

Darbar Motion Poster with Rajini's theme Music on Nov 7th

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் நவம்பர்.7ம் தேதி ரிலீசாகும் என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் காம்போ இந்த பொங்கலுக்கு அதகளம் பண்ணும் எனவும் அனிருத் தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.