Saree Challenge-காக பெண் வேடத்தில் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, மருந்துகடைகள், மருத்துவமனை உள்ளிட்டவை தவிர மற்றவை இயங்காது.
அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணவர்வு ஏற்படுத்தும் பதிவை எழுதி வருகின்றனர்
வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து மற்றவர்களையும் அதனை செய்ய வைக்கும் புதிய சேலஞ்ச் டாஸ்க்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புடவை அணிந்திருக்கும் ஃபோட்டோவை போஸ்ட் செய்ய வேண்டும் என்ற டாஸ்க் தற்போது டிரெண்டாகி வருகிறது. பிரபலங்களும் அவ்வப்போது தாங்கள் புடவை அணிந்திருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து மற்றவர்களும் அதனை செய்யும் படி சேலஞ்ச் விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஜதின் சர்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சாரி சேலஞ்சை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர், அக்ஷய் குமார் மற்றும் ரன் வீர் சிங்கிற்கு சேலஞ்ச் விடுத்துள்ளார். ஜதின் சர்னா சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ரன்வீர் சிங் மற்றும் ஜீவாவுடன் இணைந்து 83 படத்தில் நடித்து வருகிறார்.