www.garudabazaar.com

ஆஹா.. நம்ம குஷ்பூ மேடமா இது? புது லுக்கில் கலக்குறாங்களே? என்ன நிகழ்ச்சினு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலர்ஸ் தமிழில் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டிக்கெட் டூ  ஃபினாலே போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா நடுவர்களாக இருக்க, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Dance vs Dance ticket to finale round with Kushbu and Brindha

இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளுக்கு இடையே 5 பிரமாண்ட போட்டிகள் இடம்பெற உள்ளன. இதை பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். நடிகர் ஷாம் அணியைச் சேர்ந்த ஐஷு – அல்ஹேனா ஜோடி பாகுபலி பட பாடலுக்கும், நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஜோடி மற்றும் நடிகை அபிராமி அணியைச் சேர்ந்த அபிராஜ் – அஞ்சனா ஆகியோர் புதுப்பேட்டை பட பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகை இனியா அணியைச் சேர்ந்த பிரித்வி - தியான் ஜோடி காதலன் படத்தில் இருந்து மனதை கொள்ளை கொள்ளும் பாடலான ஊர்வசி பாடலுக்கு நடனமாடுகிறார்கள்.

Dance vs Dance ticket to finale round with Kushbu and Brindha

அது  மட்டுமல்லாமல் இரண்டு அணிகள் வெற்றி பெற்று முன்னேறி செல்லும், இரண்டு அணிகள் தங்கள் Dance vs Dance பயணத்தை முடித்துக் கொள்வதன் மூலம் நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக இருக்கும். இருப்பினும், நடிகை குஷ்பு ஒரு அணியை வெளியேற்றாமல் காப்பாற்ற லைப்லைனைப் பயன்படுத்துவார். அதில் எந்த அணி உள்ளே இருக்கும், எந்த அணி வெளியேறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Dance vs Dance ticket to finale round with Kushbu and Brindha

People looking for online information on குஷ்பு, டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ், பிருந்தா, Brindha, Dance Vs Dance, Kushbu will find this news story useful.