நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை குஷ்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
![Annatthe actress Kushbu shares her viral teenage photo | அண்ணாத்த நடிகை குஷ்புவின் 14 வயது ஃபோட்டோ வைரல் Annatthe actress Kushbu shares her viral teenage photo | அண்ணாத்த நடிகை குஷ்புவின் 14 வயது ஃபோட்டோ வைரல்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/annatthe-actress-kushbu-shares-her-viral-teenage-photo-14-photos-pictures-stills.jpg)
நடிகை குஷ்புவின் சமீபத்திய சமூக வலைதளப்பதிவுகள் அடிக்கடி வைரலாவது வழக்கம். மேலும் அவ்வப்போது அரசியல் ரீதியான அவரது கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் தனது துவக்க கால திரையுலக அனுபவங்கள் குறித்தும் அவர் பதிவிடுவது ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தனது புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''உங்களுடன் இதனை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் இது. அப்பொழுது எனக்கு 14 வயதிருக்கும் என்று நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த புகைப்படத்தில் குஷ்பு மிக அழகாக இருப்பதாக நடன இயக்குநர் பிருந்தா உள்ளிட்டோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Had to share this with you my friends.. many moons ago. I think i was just 14.. pic.twitter.com/Y8vq6pr00I
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 21, 2020