விக்ரமின் கோப்ரா-பொன்னியின் செல்வன் ஷூட்டிங் விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் தற்போது 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Cobra Vikram shoot detail Ponniyin Selvan Mani Ratnam

7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா கடந்த 11 நாட்களாக நிகழ்ந்து வந்த இந்த படத்தின் ஷூட் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விக்ரம் அங்கிருந்து புறப்பட்டு மணிரத்னத்தில் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

Entertainment sub editor