விஜய் சேதுபதியின் ’லாபம்’ படத்தில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து  வரும் படம்  லாபம். இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநரெஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

Vijay Sethupathi Shruti Haasan Laabam Melodious song recorded sung by

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த பட த்தில் இருந்து விஜய் சேதுபதியில் லுக் மற்றும் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்துக்காக ஸ்ருதி ஹாசன் பாடியல் ஒரு ரொமாண்டிக் பாடல் இன்று பதிவு செய்யப்படுள்ளது. இதன் வரிகளை பாடலசிரியர் யுகபாரதி எழுதி உள்ளார். இந்த ரொமாண்டிக் மெலடி பாடலை எப்போது ரிலீஸ் செய்யப்போகிறோம் என்று ஆர்வமாக காத்திருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார்.

Entertainment sub editor