Rocketry
www.garudabazaar.com

Cobra படத்தின் மூன்றாவது சிங்கிள் எப்போ?.. வெளியான அசத்தல் Update.. கூடவே நடிகை சொன்ன விஷயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படத்தின் அடுத்த பாடல் குறித்த அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Cobra third single uyir urugudhey release update

பிரபல நடிகரான சியான் விக்ரம், தற்போது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, கோப்ரா படத்தையும் இயக்கி உள்ளார்.

ஆகஸ்ட் 11'ல் கோப்ரா

இந்த படத்தில், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

மேலும், கோப்ரா படத்தின் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்ததாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் படத்தின் போஸ்டர்கள், தும்பி துள்ளல் மற்றும் அதீரா உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கோப்ரா திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும் போஸ்டருடன் கூடிய அறிவிப்பு ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Third Single குறித்த அப்டேட்

இந்நிலையில், கோப்ரா படத்தில் இருந்து அசத்தல் அப்டேட் ஒன்று, தற்போது வெளியாகி உள்ளது. தும்பி துள்ளல், அதீரா பாடல்களைத் தொடர்ந்து, அடுத்த பாடல் பெயர் மற்றும் எப்போது வெளிவரும் என்பது பற்றிய அறிவிப்பை கோப்ரா படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, "உயிர் உருகுதே" என தொடங்கும் பாடல், ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதிவை, கோப்ரா படத்தில் நடித்துள்ள நடிகை மிருணாளினி ட்விட்டரில் பகிர்ந்து, "இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Cobra third single uyir urugudhey release update

People looking for online information on Ajay Gnanamuthu, AR Rahman, Cobra from August 11, Cobra movie, Srinidhi Shetty, Uyir Urugudhey, Vikram will find this news story useful.