‘சினிமாவின் பொற்காலம் அது தான்..!’ - தமிழ் சினிமா குறித்து தமிழக முதல்வர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 25, 2019 03:30 PM
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘LKG’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய படங்களின் வெற்றி விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்த திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். நடித்த காலம் தான் பொற்காலம். எம்.ஜி.ஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும்” என கூறினார்.
“இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை. உலகப்படங்களுக்கு நிகராக தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது, பெருமையாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்றும், அத்தகைய படங்களையும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.