‘பொன்னியின் செல்வன்’ ஸ்டார் ஜெயம் ரவியின் அடுத்தப்பட ஷூட்டிங் பிளான் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூமி’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Jayam Ravi completes Bhoomi shoot, started Ahmed film shoting from today

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நேற்று (அக்.6) நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்தவுடன், டார்ஜீலிங் சென்றுள்ள ஜெயம் ரவி, அஹமத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கை இன்று (நவ.7) தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிகை டாப்ஸி, ரகுமான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த முதற்கட்ட ஷூட்டிங் இம்மாதம் நவ.24ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிச.12ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக கூறப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளில் நடிகர் ஜெயம் ரவி கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.