www.garudabazaar.com

KGF-ல் அனல் பறக்கும் தங்கலான் ஷூட்டிங்.. ஒளிப்பதிவாளர் பகிர்ந்த புகைப்படம்.. மிரட்டலா இருக்கே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கர்நாடக மாநிலம் KGF-ல் நடைபெற்று வரும் தங்கலான் படத்தின் BTS புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Chiyan Vikram Thangalaan movie shooting at KGF Pic surface

                      Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித், அடுத்த படத்தில் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு அடுத்தபடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார் பா. ரஞ்சித்.

இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த பா. ரஞ்சித், தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தங்கலான் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்து கொள்கின்றனர். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ஜனவரி மாதம் முதல் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு, KGF பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த BTS புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Chiyan Vikram Thangalaan movie shooting at KGF Pic surface

People looking for online information on KGF, Shooting, Thangalaan, Vikram will find this news story useful.