Reliable Software
www.garudabazaar.com

“தினமும் நான் வாக்கிங் போகும்போது..”.. பத்திரிகையாளர்களிடம் விக்ரம் கலகலப்பு.. ViralVideo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட வந்த விக்ரமின் வீடியோ வெளியானது.

Chiyaan Vikram walks to Poll Booth talk with photographers Video

ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே குறித்தபடி, தமிழ்நாடு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடனும், ஜனநாயக உணர்வுடனும் வந்து வாக்களித்து செல்கின்றனர்.

முன்னதாக தல அஜித் ஷாலினியுடன் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டார். பின்னர் தளபதி விஜய் சைக்கிளில் வந்து நீலாங்கரையில் ஓட்டு போட்டார். இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் ஸ்டைலாக வீட்டுக்குள் இருந்து வெளியேவந்து வாக்குச் சாவடியை நோக்கி நடந்து வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட மீடியா கேமரா காரர் ஒருவரிடம், ‘இதேமாதிரி தினமும் நான் வாக்கிங் போகும்போது வந்துடுங்க’ என ஜாலியாக கூறுகிறார்.

ALSO READ: முதல் ஆளாக ஓட்டு போட்ட தல அஜித், ஷாலினி.. தந்தையுடன் வந்து வாக்களித்த சூர்யா, கார்த்தி! Video

அதற்கு அந்த கேமராமேனோ, ‘சார் நீங்க வேற.. ஒரு நாளைக்கே தள்ளுது சார்..’ என இயல்பாக பேசுகிறார். தவிர ‘விக்ரம் சார் கொஞ்சம் ஸ்லோவாக வாங்க சார்’ என்கின்றனர். வழியில் போகும் போது ரசிகர்களுக்கு ஹை சொல்லியும் கை காட்டிக்கொண்டும் பத்திரிகையாளர்களிடையே இயல்பாக பேசிக்கொண்டும் வாக்குச்சாவடிக்கு சென்றார் விக்ரம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“தினமும் நான் வாக்கிங் போகும்போது..”.. பத்திரிகையாளர்களிடம் விக்ரம் கலகலப்பு.. VIRALVIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan Vikram walks to Poll Booth talk with photographers Video

People looking for online information on Chiyaan60, TamilNaduElections2021, TNElections2021, Vikram will find this news story useful.