இந்திய அளவில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர் சேத்தன் பகத். இவருடைய புத்தகங்களான 2 ஸ்டேட்ஸ், 3 இடியட்ஸ், ஹாஃப் கேர்ள் ஃபிரண்ட் ஆகிய புத்தகங்கள் ஹிந்தியில் திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.
இதில் குறிப்பாக இவரது 3 இடியட்ஸ் நாவல் அதே பெயரில் அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. தமிழிலும் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா உள்ளிட்டோர் நடிப்பில் நண்பன் என்கிற பெயரில் வெளியானது.
இந்நிலையில் எழுத்தாளர் சேத்தன் பகத் தன்னுடைய அனுபவங்களை Behindwoods TV க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு விருப்பமான படம் எது? 3 இடியட்ஸ் ஆ அல்லது நண்பனா ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த, நண்பன் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஷங்கர் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். ஆனால் ஹிந்தியில் இலகுவாக என்னால் புரிந்துகொள்ள முடியும் காரணம் ஹிந்தி எனக்கு பரிட்சையமான மொழி. நண்பன் சப் டைட்டிலுடன் பார்த்தேன்.
என் மனைவி தமிழ்நாடு. அவரால் நண்பனை புரிந்துகொள்ள முடியும். மேலும் தென் இந்தியர்களால் புரிந்துகொள்ள முடியுமா அது இவ்வளவு வெற்றி பெறுமா என தெரியவில்லை. காரணம் இஞ்சினியர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று நினைத்தேன். ஏனெனில் அதில் மிஷின் பற்றியெல்லாம் விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கும்.
கிக் படத்திற்கு நான் ஸ்கீரின் பிளே எழுதினேன். அது தெலுங்கில் கிக் என்கிற பெயரில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி இருந்தது. அதனை 25 முறை பார்த்தேன். என்றார்.
'தலைவா யூ ஆர் கிரேட்' - விஜய்யின் 'நண்பன்' குறித்து சுவாரஸியத் தகவல் சொல்லும் பிரபலம் வீடியோ